மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல் + "||" + 3 days of rain in Namakkal district Research Station information

நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 1 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.

அடர்தீவனம்

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் ஆடுகளுக்கு இது இனவிருத்தி காலம் ஆகும். இது பசுந்தீவனம் மற்றும் தட்பவெப்பநிலையை பொறுத்து அமையும். இந்த காலத்தில் கூடுதலான அடர்தீவனம் அளித்தால், ஆடுகள் அதிக அளவிலான குட்டிகள் ஈன வாய்ப்பு உள்ளது. மேலும் குட்டிகளுக்கான பிறப்பு எடை சீராக இருக்கும். அனைத்து வகையான நாட்டு கோழிகளுக்கும் அம்மைக்கான மூலிகை மருத்துவ முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்; இந்திய கிரிக்கெட் அணியில் 25 வீரர்கள் இடம் பெற வாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் 25 வீரர்கள் இடம் பெற கூடும் என கூறப்படுகிறது.