கலவை அருகே, வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு


கலவை அருகே, வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 16 Sept 2020 3:15 PM IST (Updated: 16 Sept 2020 3:01 PM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே வீட்டின் கதவை உடைத்து 2¾ பவுன் நகைகளை திருடிசென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கலவை, 

கலவை அருகே உள்ள மேலபந்தை கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 52). இவர் தனது மகள் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் காஞ்சீபுரம் சென்றார். வீட்டின் சாவியை பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் ருத்ராவிடம் கொடுத்து சென்றார்.

இந்த நிலையில் நேற்று கந்தனின் வீட்டு கதவு திறந்திருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த ருத்ரா உடனடியாக கந்தனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த கந்தன் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த 2¾ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வாழைப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story