தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் ஆலோசனை கூட்டம், தகவல் உரிமை சட்டத்துறையின் மக்கள் குறை தீர்க்கும் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஆகியவை சிவகாசியில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் சபையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். தகவல் உரிமை சட்டத்துறையின் மாநில பொதுச்செயலாளர் மைக்கேல் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைப்பது.
ஏழைகளை சுரண்டும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக 1 லட்சம் இளைஞர்களை கட்சியில் இணைப்பது. சிவகாசி, திருத்தங்கல் ரெயில்வே மேம்பால பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் உரிமை சட்டத்துறை சார்பில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில் மாவட்ட துணைத்தலைவராக தங்கமாரி, , வத்திராயிருப்பு மேற்கு வட்டாரத்தலைவராக செல்வராஜ், கிழக்கு வட்டார தலைவராக வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர தலைவராக தனசேகரன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் தகவல் அறியும் சட்டத்துறை மாநில செயலாளர் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்செல்வன், சிவகாசி நகர முன்னாள் தலைவர் சசிநகர் முருகேசன், அப்துல்ஜப்பார், முன்னாள் கவுன்சிலர்கள் காசி, கருப்பையா, ஆறுமுகச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story