மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது + "||" + In the district of Kallakurichi Two arrested for fraud in farmers' financial assistance scheme

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் விவசாயிகள் அல்லாதவர்கள் 2 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி இயக்குனர்கள் 2 பேர் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்கள் 18 பேர் ஆக மொத்தம் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் போலி விவசாயிகள் 50 ஆயிரம் பேரிடம் இருந்து வங்கிகள் மூலம் ரூ. 15 கோடி வரை திரும்ப பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 7 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளளனர்.

இந்நிலையில் இந்த முறைகேட்டில் கள்ளக்குறிச்சி தாலுகா கொங்கராயப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 29), உளுந்தூர்பேட்டை தாலுகா கீழ்குப்பம்வேலூரை சேர்ந்த தமிழரசன் (21) ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சண்முகம், தமிழரசன் ஆகிய இருவரும் அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அவர்களிடம் இருந்து பயனாளர் பெயர் (யூசர்நேம்), கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவற்றை ரகசியமாக பெற்று அதனை தங்களது ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தங்கள் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அல்லாதவர்களை இத்திட்டத்தில் போலியாக சேர்த்துள்ளதும், இவ்வாறாக சண்முகம் 1,300 பேரையும், தமிழரசன் 600 பேரையும் இத்திட்டத்தில் போலியாக சேர்த்து நிதி உதவி பெற்றிருப்பதும், இதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்து ரூ.500 முதல் ரூ.1,000 வரை பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து சண்முகம், தமிழரசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.