மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி - கர்ப்பிணிகள் உள்பட 268 பேருக்கு பாதிப்பு உறுதி + "||" + In Cuddalore district, 4 more people were killed by the corona - 268 people, including pregnant women, were confirmed affected

கடலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி - கர்ப்பிணிகள் உள்பட 268 பேருக்கு பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி - கர்ப்பிணிகள் உள்பட 268 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். கர்ப்பிணிகள் உள்பட 268 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 268 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கம்மாபுரம், விருத்தாசலத்தை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், கர்நாடகா, நாகையில் இருந்து கடலூர் வந்த 2 பேர், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 132 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 132 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,826 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 523 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதற்கிடையே நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இதன் விவரம் வருமாறு:-

விருத்தாசலத்தை சேர்ந்த 46 மற்றும் 42 வயதுடைய ஆண்கள் 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், புவனகிரியை சேர்ந்த 55 வயது ஆண் மேல்மருவத்தூர் மருத்துவமனையிலும், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 73 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர். மேலும் 3 ஆயிரத்து 60 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி: கர்ப்பிணிகள் உள்பட 183 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். கர்ப்பிணிகள் உள்பட 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. மாவட்டத்தில் 263 பேருக்கு பாதிப்பு உறுதி: கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி - ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
மாவட்டத்தில் 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை