மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார் + "||" + Collector Jayachandrabanu Reddy distributed dry food items to students in Krishnagiri

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்
கிருஷ்ணகிரியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று கால நிவாரணமாக அரிசி, பருப்பு மற்றும் முட்டை உள்ளிட்ட உலர் உணவு பொருட்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி,

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுபடி, சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று காலத்திற்கு நிவாரணமாக கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பள்ளி வேலை நாட்களுக்கு மட்டும் அரிசி மற்றும் பருப்பு, செப்டம்பர் மாதத்திற்கான முட்டை உள்ளிட்ட உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டுளை மாணவிகளின் பெற்றோர்களிடம் உலர் உணவு பொருட்களை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் கற்பகவள்ளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கிருஷ்ணகிரி தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, உமா மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாசலம், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

1,737 சத்துணவு மையங்களில்...

அப்போது அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,737 சத்துணவு மையங்களில் சத்துணவு சாப்பிடும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காலத்திற்கு நிவாரணமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவு பொருட்கள் மற்றும் முட்டைகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சத்துணவு சாப்பிடும் 386 மாணவிகளின் பெற்றோர்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது முறையாக 445 ஊராட்சிகளுக்கு கபசுர குடிநீர் பொடி அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் பொடியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
2. தளி ஒன்றியத்தில் ரூ.77 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
தளி ஒன்றியத்தில் ரூ.77 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
3. நாமக்கல் பஸ் நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு
நாமக்கல் பஸ் நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு நடத்தினார்.
4. கிருஷ்ணகிரி அருகே புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
5. இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணை கல்வி அதிகாரி வழங்கினார்
இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை மாவட்ட கல்வி அதிகாரி ராமன் வழங்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...