‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2020 4:30 PM IST (Updated: 17 Sept 2020 4:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், 

வேலூர், காட்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் தொகுதி செயலாளர் சரத், காட்பாடி தொகுதி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். வேலூர் தொகுதி தலைவர் கார்த்திகேயன், காட்பாடி தொகுதி தலைவர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கல்வி என்பது மாநிலங்களின் உரிமை. அதனை பறிப்பது பாசிசக் கொடுமை. தமிழக ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியும், மருத்துவமும் சேவைகள். அவற்றை வணிகமாக்கி விற்கக்கூடாது. ‘நீட்’ தேர்வை திணித்து மாணவர்களின் உயிரை பறிக்கக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் பெரியார் பூங்காவில் இருந்து கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், வேலூர் தொகுதி செய்தி தொடர்பாளர் மணிமாறன், வேலூர் தொகுதி துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story