மோடி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி பா.ஜனதாவினர் கொண்டாட்டம்


மோடி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி பா.ஜனதாவினர் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2020 3:30 AM IST (Updated: 17 Sept 2020 11:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மோடி பிறந்தநாளையொட்டி பா.ஜனதாவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் சர்வமத பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சிவன் கோவிலிலும், பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலை, அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் பிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் சிவா முத்துக்குமார், வணிகப் பிரிவு மாவட்ட செயலாளர்கள் பழனிவேல், பால பொய்சொல்லான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைக்கு மாநில மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள் தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர் அங்குள்ள தாய்மார்களுக்கு ரொட்டி மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பா.ஜனதா மாவட்ட மகளிரணி பொது செயலாளர் செல்வராணி, ஒன்றிய அமைப்பாளர் திருநாவுக்கரசு, சக்தி கேந்திர அமைப்பாளர் கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றிய கேந்திர பொறுப்பாளர் பாஸ்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பர்வதவர்த்தினி, நகர மகளிரணி தலைவி பார்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டும், கண் தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட பா.ஜனதா சார்பில் 55 பேர் கண் தானம் செய்தனர். நிகழ்ச்சிக்கு, பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். தலைமை டாக்டர் பொன்ரவியிடம், பா.ஜனதாவினர் 55 பேர் கண்தானம் செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்கினர். நிகழ்ச்சியில், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், நகர தலைவர்கள் பண்டாரம், ஆறுமுகம், முன்னாள் நகர தலைவர் செந்தில்குமார், நகர பொது செயலாளர் வேல்குமார், மகளிரணி மாவட்ட தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் மேனகா, கிளை தலைவர்கள் குமாரவேல், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா அரசு தொடர்பு பிரிவு சார்பில் திருச்செந்தூர் ஆனந்தவிநாயகர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது, தொடர்ந்து நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தூய்மை பாரத திட்டத்தை வலியுறுத்தி தூய்மை பணி செய்தனர்.

நிகழ்ச்சிக்கு, அரசு தொடர்பு பிரிவு மாநில பொது செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், சாத்தக்குட்டி, திருச்செந்தூர் மண்டல தலைவர் பிரிதிவிராஜன், மாவட்ட மகளிரணி பொது செயலாளர் சரஸ்வதி, வக்கீல் கிரீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா ஆறுமுகநேரியில் கொண்டாடப்பட்டது இதனையொட்டி ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஆறுமுகநேரி நகர பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் பற்குணபெருமாள், நகர பொதுச்செயலாளர் தூசிமுத்து, பொருளாளர் முருகேச பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர தலைவர் செந்தூர்பாண்டி முன்னாள் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர இளைஞரணி செயலாளர் செல்வகுமார், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல் காயல்பட்டினம் நகர பா.ஜனதா சார்பில் எல்.ஆர்.நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் பிரதமரின் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவில் நகர பா.ஜனதா தலைவர் பண்டாரம் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மேலும் 70 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்வேல், மாவட்ட பிரசார அணி செயலாளர் தங்கப்பாண்டியன், சந்திரசேகர், சாய்பாபா, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story