பிறந்த நாள் விழா: பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நெல்லை மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், எஸ்.கே.எம்.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. ஆகியோர் தனித்தனியாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மாநில செய்தி தொடர்பாளர் முத்து வளவன் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக மரியாதை செலுத்தப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன் தலைமையிலும், நெல்லை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கிருஷ்ணன் தலைமையிலும், மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையிலும், ஆதித்தமிழர் கட்சி தென்மண்டல இளைஞரணி செயலாளர் குட்டிபாய் தலைமையிலும், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் காசி தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பாலமுருகன் சரவணன், மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை பூக்கடை பஜாரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் உருவ படத்திற்கு பகுதி பொறுப்பாளர் மணிவண்ணன் தலைமையில், தி.மு.க. நகர செயலாளர் பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புரட்சிகர இளைஞர் முன்னணி கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் வடிவேல், தி.மு.க. நகர துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பூரணி சாத்தான்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாயநேரியில் நாங்குநேரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண்ணு பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் ராமையா, முருகன், கிட்டு, சீனித்துரை, ஆபிரகாம், முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story