நினைவு இல்லத்தில் விழா: தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்தார்
தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்தார். பகுத்தறிவு தந்தை பெரியார் 142- வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடந்தது. ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் நடந்த விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.
விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், தாட்கோ மேலாளர் சிந்துஜா, பிற்படுத்தப்பட்டார் - சிறுபான்மையினர் நல அதிகாரி இளங்கோ, மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அதிகாரி செ.கு.சதீஸ்குமார், தாசில்தார் பரிமளா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் பல்வேறு கட்சிகள், அமைப்பினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஈரோடு மாவட்ட தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறுபான்மையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள், பிற்படுத்தப்பட்டோர் என 97 பேருக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Related Tags :
Next Story