மக்கள் விதிகளை பின்பற்றாததே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் சுகாதாரத்துறை மந்திரி வேதனை
பொதுமக்கள் விதிகளை பின்பற்றாததே தொற்று அதிகரிப்புக்கு காரணம் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டி உள்ளது. 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இந்தநிலையில் ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்ட தளர்வு மற்றும் பொதுமக்கள் விதிகளை பின்பற்றாததே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கவலை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது.
நாம் ஊரடங்கில் ஏற்படுத்தி வரும் தளர்வுகளும், பொதுமக்கள் விதிகளை பின்பற்றாததுமே திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமாகும். அரசு தொற்று பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. என் குடும்பம், எனது பொறுப்பு திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய உள்ளோம். 2 கட்டங்களாக நடைபெறும் இந்த திட்டம் அக்டோபர் கடைசி வாரத்தில் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story