அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்: மருத்துவ படிப்புகளில் சேர புதுவையிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு - திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
பெரியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி புதுவை பிள்ளைதோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர் திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தபின் நிருபர்களிடம் திருமாவளவன் எம்.பி. கூறியதாவது:-
பெரியாரின் பிறந்தநாளானது சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த நாளில் மாநில உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து போராட உறுதி ஏற்போம். தற்போது சமூக நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது. இதனால் அகில இந்திய அளவில் பெரியார் தேவைப்படுகிறார். மோடி அரசு கொரோனா பணிகளை சரியாக கையாளவில்லை. தவறான அணுகுமுறையினால் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரித்தொகையும் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழகம்-புதுச்சேரிக்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்கவேண்டும்.
தமிழகம், புதுச்சேரியில் நீட் தேர்வினை ரத்துசெய்ய வேண்டும். இந்த தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கு 7.5 சதவீத இடம் ஒதுக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story