பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி


பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 Sept 2020 5:33 AM IST (Updated: 18 Sept 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள அத்திபேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 45). இவரது மகன் விக்னேஷ் (18). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான கவுதம் (18), நெல்சன் (16) ஆகியோாருடன் நேற்றுமுன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கவுதம், நெல்சன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நெல்சன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதாவது வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதா? அல்லது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானதா? என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story