மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 23-ந்தேதி தாயார் திருவடி சேவை + "||" + Renganachchiyar Navratri Celebration at Srirangam Renganathar Temple Mother Thiruvadi Service on 23rd

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 23-ந்தேதி தாயார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 23-ந்தேதி தாயார் திருவடி சேவை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. வருகிற 23-ந்தேதி தாயார் திருவடி சேவை நடக்கிறது.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து 8.45 மணி வரை நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.


2-ம் திருநாளான இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 6-ம் திருநாளான 22-ந் தேதி வரை மற்றும் 8-ம் திருநாளான 24-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.

தாயார் திருவடி சேவை

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருநாளான 23-ந் தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 25-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேல்மருவத்தூர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
மேல்மருவத்தூர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடந்தது.
2. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது.
3. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது இன்று பூச்சாண்டி சேவை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூச்சாண்டி சேவை நடைபெறுகிறது.