தர்மபுரியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தர்மபுரியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 18 Sept 2020 8:46 AM IST (Updated: 18 Sept 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தர்மபுரி,

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா தர்மபுரியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் பெரியார் சிலைக்கு விவசாய பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் குருநாதன், மோகன், பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், செந்தில்குமார், சேகர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், கூட்டுறவு ஒன்றிய இயக்குனர் மாதேஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் மாதேஷ், அங்குராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தி.மு.க.-அ.ம.மு.க.

இதேபோன்று தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணைசெயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, நகர செயலாளர் தங்கராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், குமரவேல் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, தங்கமணி, சந்திரமோகன், அன்பழகன், காசிநாதன், பொன்.மகேஸ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். இதில் நகர செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், கணேசன், ரவிக்குமார், நகர பேரவை செயலாளர் பெருமாள் மாவட்ட நிர்வாகிகள் வேலாயுதம், கோகுல்ராஜ், ரமேஷ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.- ம.தி.மு.க.

தர்மபுரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சியின் அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர், மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் மணிமுனியப்பன், நகர செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாநில இளைஞரணி செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகர செயலாளர் வீரமணி, மாவட்ட அவைத்தலைவர் சாமிகண்ணு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆசைபாஷா, தீர்மானக்குழு உறுப்பினர் வஜ்ஜிரவேல், மாவட்ட துணைசெயலாளர்கள் வைஜெயந்தி, முத்தியாலு, புத்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாசம், சிவபாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட தலைவர் சிவாஜி தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் தி.க. கொடியை ஏற்றினார். நகர தலைவர் கருபாலன், நகர செயலாளர் பரமசிவம், அமைப்பாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ், காமராஜ், ஏங்கல்ஸ், கதிர், செந்தில்குமார், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், அர்ச்சுனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள்

தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட பொருளாளர் மன்னன், மாவட்டசெய்தி தொடர்பாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மின்னல்சக்தி, மாநிலசெயற்குழு உறுப்பினர் ராமன், மாநில நிர்வாகிகள் திருமாறன், அம்பேத்வளவன், மாது, நகர நிர்வாகிகள் ராமதுரை, இளையராஜா, ஆறுமுகபாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் இனமுரசு கோபால் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில தலைவர் மாறன் பெருமாள், ஆலோசகர் மாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story