திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 18 Sept 2020 10:52 AM IST (Updated: 18 Sept 2020 10:52 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவருடைய உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் பெரியார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருடைய சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் பசீர்அகமது, நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையிலும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநில பிரசார செயலாளர் துரை சம்பத் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் என்.செல்வராகவன் உள்ளிட்ட நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொறுப்பாளர் ரோக்கஸ்வளவன், மாநில நிர்வாகி திருச்சித்தன் உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதுதவிர ஆதித்தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தனர்.

பழனி

பழனி அ.தி.மு.க. சார்பில், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்வர்தீன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆவின் தலைவர் செல்லச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், நகர செயலாளர் முருகானந்தம், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ராஜாமுகமது, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் விஜயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டையில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவுக்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேடசந்தூரில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சாணார்பட்டி ஒன்றியம்

சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கோபால்பட்டியில் நடந்தது. இதற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன் தலைமை தாங்கி, பெரியாரின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், மாவட்ட கவுன்சிலர் லலிதா, வேம்பார்பட்டி ஊராட்சி தி.மு.க. செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். குஜிலியம்பாறையில் தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் பெரியார் பிறந்தநாள் விழா நடந்தது. குஜிலியம்பாறை பஸ் நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story