தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக பாடத்திட்டங்கள் குழு அறிக்கையின் அடிப்படையில் 40% குறைக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
இது குறித்து கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
தமிழக பாடத்திட்டங்கள் குழு அறிக்கையின் அடிப்படையில் 40% குறைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டி தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம்.
கொரோனா முடிவுக்கு பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும். அத்துடன் கல்வித்தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். *சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Related Tags :
Next Story