சாலையில் கிடந்த ரூ.1 லட்சத்தை மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு பாராட்டு
நெல்லை அருகே சாலையில் கிடந்த ரூ.1 லட்சத்தை மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் (வயது 48) மற்றும் அவரது சகோதரர் ஜெயக்குமார் (46). இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் மோட்டார் சைக்கிளில் ராமையன்பட்டி வழியாக சென்றனர். அப்போது வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம், சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை தவற விட்டுள்ளனர்.
அப்போது மானூர் போலீஸ் நிலைய போலீசார் மணிகண்டன் மற்றும் சண்முகராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும்போது, ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி அருகே கிடந்த துணிப்பையை பார்த்து எடுத்தனர். அதில் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதனை போலீசார் மானூர் இன்ஸ்பெக்டர் ராமரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே பணத்தை தவறவிட்ட சுந்தர்ராஜ், ஜெயக்குமார் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர். போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரித்து பணம், ஆவணங்களை ஒப்படைத்தனர். இதை அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், போலீசார் மணிகண்டன், சண்முகராஜா ஆகியோரை அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

Related Tags :
Next Story