சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நடந்தது: கொரோனாவால் இறந்த பா.ஜனதா எம்.பி. உடல் தகனம் - மகள் இறுதிச்சடங்கு நடத்தினார்


சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நடந்தது: கொரோனாவால் இறந்த பா.ஜனதா எம்.பி. உடல் தகனம் - மகள் இறுதிச்சடங்கு நடத்தினார்
x
தினத்தந்தி 19 Sept 2020 5:00 AM IST (Updated: 19 Sept 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பால் இறந்துபோன பா.ஜனதா எம்.பி. அசோக் கஸ்தியின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மகள் இறுதிச்சடங்கு நடத்தினார்.

ராய்ச்சூர்,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் (மாவட்டம்) போடகல் பகுதியை சேர்ந்தவர் அசோக் கஸ்தி (வயது 55). பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். சமீபத்தில் தான் அவர் எம்.பி.யாக தேர்வானார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ராய்ச்சூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாக நேற்று முன்தினம் மாலை டாக்டர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.31 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவே கவுடா உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மறைந்த அசோக் கஸ்தியின் உடல் அவரது சொந்த ஊரான போடகல் கிராமத்திற்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள மயானத்தில் அவரது உடலை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுகாதாரத் துறையினர் தகனம் செய்தனர். மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வந்த நிலையில் மறைந்த அசோக் கஸ்தி உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த அசோக் கஸ்திக்கு மகன் இல்லை. இதனால் அவரது மகள் நேகா கஸ்தி தனது தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தி னார். அப்போது நேகா கஸ்தி, முழுகவச பாதுகாப்பு உடை அணிந்திருந்தார். இறுதிச்சடங்கில் சிவராஜ் பட்டீல் எம்.எல்.ஏ., கலெக்டர் வெங்கடேஷ் குமார் உள்பட 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

மறைந்த அசோக் கஸ்தி, ஆரம்பத்தில் ஏ.வி.பி.வி. அமைப்பில் இருந்து வந்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். ராய்ச்சூர், பல்லாரி, கொப்பல் மாவட்ட பா.ஜனதா பொறுப்பாளராக அவர் பதவி வகித்துள்ளார். அவர் ராய்ச்சூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட 2 முறை முயற்சி செய்தார். ஆனால் டிக்கெட் கிடைக் காமல் போனது. இந்த நிலையில் கட்சி மேலிடம் அவரது கட்சி பணியை பார்த்து அவருக்கு மாநிலங் களவை எம்.பி.யாக பதவி வழங்கியது. அவர் கடந்த ஜூலை 22-ந்தேதி பதவி ஏற்ற நிலையில் தற்போது கொரோனாவுக்கு அவர் பலியாகியுள்ளார்.

தேவராஜ அர்ஸ் மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும், ராய்ச்சூர் மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளராகவும், பா.ஜனதா இளைஞர் அணி தலைவ ராகவும், மாவட்ட அமைப்பு செயலாளராகவும் மறைந்த அசோக் கஸ்தி பணியாற்றி யுள்ளார். 2001-ம் ஆண்டு ராய்ச்சூர் நகரசபை உறுப் பினராகவும், 2010-ம் ஆண்டு ராய்ச்சூர் மாவட்ட பா.ஜனதா தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். பொரு ளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த அசோக் கஸ்தி, வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story