ஒர்லி ரத்த பரிசோதனை மையத்தில் நைட்ரஜன் திரவவாயு கொள்கலன் வெடித்து விபத்து - பெண் ஊழியர் காயத்துடன் உயிர் தப்பினார்
ஒர்லி ரத்த பரிசோதனை மையத்தில் நைட்ரஜன் திரவவாயு கொள்கலன் திடீரென வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. பெண் ஊழியர் காயத்துடன் உயிர் தப்பினார்.
மும்பை,
மும்பை ஒர்லி சென்ஜூரி கட்டிடத்தின் மேல் தளத்தில் ரத்த பரிசோதனை மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று காலை 9 மணி அளவில் பெண் ஊழியர் மட்டும் பணியில் இருந்தார். அப்போது அங்கிருந்த 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட நைட்ஜரன் திரவ வாயு அடங்கிய கொள்கலன் திடீரென வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. அங்கு பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் சுசித் ராஷ்மி (வயது30) லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் கட்டிடத்தின் சிலாப், சுற்றுச்சுவர், தரைக்கற்கள் மின்சாதன பொருட்கள் போன்றவை நொறுங்கி சேதமடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீ விபத்து ஏற்படாத வண்ணம் வீரர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கொள்கலன் வெடித்த போது மற்ற ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story