வேறு பெண்ணுடன் கணவருக்கு கள்ளத்தொடர்பு: மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை


வேறு பெண்ணுடன் கணவருக்கு கள்ளத்தொடர்பு: மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Sept 2020 5:49 AM IST (Updated: 19 Sept 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

கணவர் வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் மனமுடைந்த மனைவி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி ரஞ்சனி 35. இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையறிந்த ரஞ்சினி தன் கணவரிடம் கள்ளக்காதலை விடுமாறு கூறி சண்டை பிடித்துள்ளார்.

இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. இருப்பினும் முருகன் தனது கள்ளக்காதலை விடாமல் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரஞ்சினி நேற்று முன்தினம் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story