ஓமலூர் அருகே, வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்


ஓமலூர் அருகே, வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 19 Sept 2020 3:45 AM IST (Updated: 19 Sept 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பலை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

ஓமலூர்,

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட லோக்கூர் காப்பு காட்டில் சந்தன மரங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று அங்கு உள்ள பல லட்சம் மதிப்பிலான சந்தன மரங்களை வெட்டி கடத்தப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தன.

இதைத்தொடர்ந்து வன காப்பாளர் திருமுருகன், வனகாவலர் புருஷோத்தமன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை கடத்தல் கும்பல் வெட்டி உள்ளது. அதில் விளைச்சல் ஆன மரங்களை மட்டும் வெட்டி கடத்தியது தெரியவந்தது. மீதமுள்ள மரத்துண்டுகள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன. இதுகுறித்து வனதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், லோக்கூர் காப்பு காட்டில் இருந்த சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்திச்சென்றுள்ளது. அந்த கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி தேடி வருகிறோம். சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story