மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு: ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி


மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு: ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 18 Sep 2020 10:30 PM GMT (Updated: 19 Sep 2020 4:01 AM GMT)

கரூர் மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் புதிதாக 40 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி டி.என்.பி.எல். காலனியை சேர்ந்த 30 வயது பெண், அரவக்குறிச்சியை சேர்ந்த 45 வயது ஆண், எல்.வி.பி. நகரைச் சேர்ந்த 35 வயது ஆண், சண்முகா நகர் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, பாப்பக்காபட்டியை சேர்ந்த 27 வயது பெண், குளித்தலையை சேர்ந்த 23 வயது இளம் பெண், 39 வயது ஆண், 40 வயது ஆண், 75 வயது முதியவர் மற்றும் 80 வயது மூதாட்டி.

திருச்சியை சேர்ந்த 40 வயது ஆண், அருணாச்சல நகரை சேர்ந்த 61 வயது ஆண், வடக்குபாளையம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, காந்தி கிராமத்தை சேர்ந்த 77 வயது முதியவர், அண்ணாநகரை சேர்ந்த 37 வயது பெண், காமராஜர் தெருவை சேர்ந்த 40 வயது ஆண்.

மேலும், பரமத்தியை சேர்ந்த 75 வயது மூதாட்டி, மண்மங்கலத்தை சேர்ந்த 56 வயது பெண், அரசு மருத்துவக் கல்லூரி பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர், பரமத்திவேலூரை சேர்ந்த 48 வயது ஆண், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 34 வயது பெண், நாமக்கல்லை சேர்ந்த 45 வயது பெண், நெரூர் பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர், ஜவகர் பஜார் பகுதியை சேர்ந்த 62 வயது பெண், 19 வயது வாலிபர் மற்றும் கடவூரை சேர்ந்த 65 வயது முதியவர், தாந்தோணி மலையை சேர்ந்த 45 வயது ஆண், கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த 58 வயது பெண் உள்பட 40 பேர் ஆவர்.

அவர்கள் அனைவரும் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story