40 இடங்களில் நுண்ணுயிர் செயலாக்க மையங்கள் அமைப்பு: குப்பை உரத்தை பயன்படுத்தி காய்கறி-பழங்கள் சாகுபடி நெல்லை மாநகராட்சி புதிய முயற்சி
நெல்லை மாநகராட்சி பகுதியில் 40 இடங்களில் நுண்ணுயிர் செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது. அதில் குப்பையிலிருந்து உரங்கள் தயார் செய்யப்பட்டு காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லை,
நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நெல்லை அருகே ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மக்கும் குப்பையில் இருந்து உரங்கள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தச்சநல்லூர் மண்டலத்தில் உடையார்பட்டி, செல்விநகர், இந்தியா சிமெண்டு அதிகாரி காலனி ஆகிய இடங்களிலும், பாளையங்கோட்டை மண்டலத்தில் அருள்நகர், சங்கர் காலனி, வேலவர் காலனி, அய்யாநகர், டார்லிங் நகர், மனக்காவலம்பிள்ளை பூங்கா, காமராஜ் காலனி, ரகுமத் நகர் ஆகிய இடங்களிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் அண்ணாநகர், புதிய நகர், என்.ஜி.ஓ. காலனி, கே.நகர், மகிழ்ச்சி நகர், உடையார் நகர், என்.ஜி.ஓ. ‘பி‘ காலனி, திருநகர், திருமால் நகர் உள்ளிட்ட இடங்களிலும், நெல்லை மண்டலத்தில் பல்வேறு இடங்களிலும் நுண்ணுயிர் செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் நுண்ணுயிர் செயலாக்க மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்குள்ள தொட்டியில் குப்பைகள் தரம் பிரித்து கொட்டப்படுகின்றன. இயற்கை உரங்கள் மூலம் மக்கும் குப்பைகள் உருவாக்கப்படுகின்றன. அந்தந்த பகுதியில் இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது.
அதாவது, 50 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீரில் 5 கிலோ மண்டை வெல்லம், 2 லிட்டர் புளித்த தயிர் சேர்க்கப்படுகிறது. இவற்றை பெரிய சின்டெக்ஸ் தொட்டியில் வைத்து மூடுகின்றனர். அவை ஒரு வாரத்திற்கு பின் இயற்கை கரைசலாக மாறிவிடுகின்றன. ஒரு டன் குப்பையில் 5 லிட்டர் இயற்கை கரைசல் ஊற்றப்படுகிறது. ஒரு வாரத்தில் குப்பைகள் மக்கி உரமாக மாறுகின்றன.
இந்த உரங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நுண்ணுயிர் செயலாக்க மையம் பகுதியில் தோட்டங்களிலும், மாநகராட்சி பூங்காக்களிலும் இந்த குப்பை உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாழை, முருங்கை, கொய்யா, அத்தி, புளியமரம், வேப்பமரம், நெல்லிக்காய் மரம், அன்னாசி செடி, சப்போட்டா மரம், மாதுளை உள்ளிட்டவைகளுக்கு குப்பை உரம் வழங்கப்படுகின்றன.
அதேபோல் தக்காளி, அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கீரை வகைகள் மற்றும் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஊட்டி மிளகாய், திராட்சைக்கொடி, சந்தன மரம், ஆப்பிள் மரம் போன்றவைகளும் வளர்க்கப்படுகின்றன. பலவகையான ரோஜா பூக்களும் சாகுபடி செய்யப்படுகிறது. சில நுண்ணுயிர் மையங்களில் கோழிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இயற்கை உரங்கள் ஒரு கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், தோட்டங்களை வைத்துள்ளவர்களுக்கும் இந்த உரம் வழங்கப்படுகிறது. இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் காய்கறி, பழங்கள் போன்றவற்றையும் விற்பனை செய்கின்றனர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதன்மூலம் கிடைக்கும் வருமானம் அந்தந்த பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் பணியாளர்கள் ஆர்வமுடன் வேலை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் கூறியதாவது:-
நெல்லை மாநகர் பகுதியில் நுண்ணுயிர் செயலாக்க மையம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு நுண்ணுயிர் செயலாக்க மையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் மாநகர பகுதியில் 40 இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் உரத்தை பயன்படுத்தி இயற்கையான முறையில் சாகுபடி செய்து பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 110 டன் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் இயற்கை உரங்களாக மாற்றப்பட்டு, தேவைப்படுகிறவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் புதிய திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story