தடை உத்தரவால் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்
அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்ததால், பக்தர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வி.கைகாட்டி,
அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கம்பு, சோளம், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை காணிக்கையாக செலுத்தி, நேர்த்தி கடனை முடித்து செல்வார்கள்.
மேலும் புரட்டாசி மாதம் முழுவதும் இந்த கலியுக வரதராஜ பெருமாள் கோவில் விழாக்கோலம் பூண்டு இருக்கும். அதேபோல் இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தநாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் இந்த கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதித்து மாவட்ட கலெக்டர் ரத்னா நேற்று முன்தினம் அறிவித்தார்.
பக்தர்கள் ஏமாற்றம்
இதுகுறித்த தகவல் தெரியாத திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பலரும் குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நேற்று கோவிலுக்கு வந்தனர். அவர்களை போலீசார் அரியலூர் - கல்லங்குறிச்சி பிரிவு சாலை மற்றும் கோவில் சுற்று வட்டார சாலைகளில் வழிமறித்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தெரிவித்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், கோவிலுக்கு செல்லும் சாலை, கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அரியலூர்
ஆனால் அரியலூரில் உள்ள பெருமாள் கோவில் திறக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். கல்லங்குறிச்சி கோவிலுக்கு செல்லமுடியாத பக்தர்கள் அரியலூர் பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதனையடுத்து அந்த கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story