புரட்டாசி மாதம் என்பதால் மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் குறைந்தது - இறைச்சி கடைகளிலும் விற்பனை மந்தம்
புரட்டாசி மாதம் என்பதால் மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. இறைச்சி கடைகளிலும் விற்பனை மந்தமாகவே இருக்கிறது.
சென்னை,
புரட்டாசி மாதம் என்றாலே விரதத்துக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து இறைவனை வழிபடுவார்கள். அசைவ பிரியர்களும் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி சாப்பிடாமல் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டிருப்பார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி வியாபாரம் மந்தமாகவே இருக்கும்.
இந்த வருடம் புரட்டாசி மாதம் கடந்த 17-ந்தேதி பிறந்தது. புரட்டாசி மாதத்தையொட்டி சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் தற்போது குறைவான மக்களே மீன்கள் வாங்க வருகிறார்கள். இதனால் மீன்கள் விற்பனை பெருமளவில் பாதித்திருப்பதாக அங்குள்ள வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இதேபோல காசிமேடு, காவாங்கரை, திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட நகரின் மற்ற மீன் மார்க்கெட்களிலும் நேற்று மக்கள் கூட்டம் குறைந்திருந்த காட்சியையே பார்க்க முடிந்தது.
மீன்மார்க்கெட்கள் போலவே கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளிலும் விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது. வழக்கமான கூட்டத்தை பார்க்க முடியவில்லை. புரட்டாசி மாதத்தையொட்டி 60 சதவீத விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதாக இறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரிய ஓட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படும் இறைச்சி அளவும் குறைந்திருப்பதாகவே வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story