கிருஷ்ணகிரி அருகே புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு


கிருஷ்ணகிரி அருகே புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 20 Sept 2020 8:38 AM IST (Updated: 20 Sept 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளியில் ரூ.338 கோடியே 95 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தரைதள மேற்கூரை கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார். தரை தளத்தில் அமைய உள்ள உடற்கூறு மையம், வகுப்பறைகள், அருங்காட்சியகம், உடற்கூறு ஆய்வு விளக்க அறை, விலங்குகள் சோதனை மையம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

மேலும் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் எம்.ஆர். ஸ்கேன் மையம், ரேடியாலஜி மையம், மைக்ரோ ஆய்வகம், நோயியல் மையம் ஆகியவை அமைய உள்ள கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பொது சிகிச்சை மையம், கொரோனா தடுப்பு சிகிச்சை பிரிவு மையம், ரத்த சுத்திகரிப்பு மையம், விஷ முறிவு மையம் உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்

கொரோனா சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு வழங் கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் இறப்பு விகிதம் குறையும் வகையில் தரமான சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அப்போது மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், உள்ளிருப்பு மருத்துவர் ஸ்ரீதர், மகப்பேறு மருத்துவர் செல்வி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மகாவிஷ்ணு, உதவி பொறியாளர்கள் பன்னீர்செல்வம், பழனிசாமி, சேகர், கீதா, தாசில்தார் வெங்கடேசன் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

Next Story