விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் டேராடூன் இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம்,
உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு 8-ம் வகுப்பு (ஆண்கள் மட்டும்) சேர்க்கை செய்யப்படும். கல்வித்தகுதி 7-ம் வகுப்பு படிப்பவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள். வயது வரம்பு 11½ வயது முதல் 13 வயது வரை (1.7.2021 தேதியில் 2.7.2008-க்கு முன்னரும் மற்றும் 1.1.2010-க்கு பின்னரும் பிறந்த தேதி இருத்தல் கூடாது).
இதற்கான விண்ணப்பங்களை THE COMMANDANT RIMC DEHRADUN, DRAWEE BRANCH, STATE BANK OF IDIA, TEL BHAVAN, DEHRADUN (BANK CODE01576), uttarakhand என்ற அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்ப கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.555 ஆகும். இதனை விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.
இதற்கான தேர்வு 1.12.2020 மற்றும் 2.12.2020 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. ஆங்கிலம் (125 மதிப்பெண்கள்) தேர்வு 2 மணி நேரமும், கணிதம் (200 மதிப்பெண்கள்) 1.30 மணி நேரமும், பொது அறிவு (75 மதிப்பெண்கள்) 1 மணி நேரமும் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வரப்பெற வேண்டிய கடைசி நாள் 30.9.2020 ஆகும். நேர்முக தேர்வு 6.4.2021 அன்று நடைபெறும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story