விருத்தாசலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை


விருத்தாசலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 Sept 2020 8:30 PM IST (Updated: 20 Sept 2020 8:26 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணாடம்,

விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருடைய மனைவி ரேவதி (வயது33). பாக்கியராஜ், விருத்தாசலத்தில் பழ வியாபாரம் செய்து வந்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 5 மாதமாக பழ வியாபாரம் பாதிக்கப்பட்டது. போதிய வருமானம் இல்லாததால் கணவர்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரேவதி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story