கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மைசூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதேபோல, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த 2 அணைகளும் ஏற்கனவே முழுகொள்ளளவை எட்டி நிரம்பி விட்டன. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 124.69 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரத்து 337 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,280 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று காலை 2,279 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி வழியாகவும், கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கபிலா ஆறு வழியாகவும் சென்று டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் ஒன்றிணைந்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 65,337 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Related Tags :
Next Story