திருமானூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் காயம்


திருமானூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Sept 2020 6:08 AM IST (Updated: 21 Sept 2020 6:08 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் செந்தில்(வயது 28).

இவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் நேற்று அவருடைய உறவினர்கள் 17 பேர் வைப்பம் கிராமத்தில் நடந்த விசேஷத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சரக்கு ஆட்டோவை செந்தில்ஓட்டினார்.

ஏலாக்குறிச்சி- கோவிலூர் சாலையில் புள்ளம்பாடி வாய்க்கால் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஏலாக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதில் சுமதி, வசந்தி, பாப்பம்மாள் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர்கள் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story