தீயணைப்பு படையினர் சார்பில் சோத்துப்பாறை அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை


தீயணைப்பு படையினர் சார்பில் சோத்துப்பாறை அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 21 Sept 2020 8:42 AM IST (Updated: 21 Sept 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சோத்துப்பாறை அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

பெரியகுளம்,

பெரியகுளம் தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சோத்துப்பாறை அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெரியகுளம் கோட்டாட்சியர் சினேகா தலைமை தாங்கினார். மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா, தாசில்தார் ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர் பேரிடர் காலங்களில் எவ்வாறு பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது, அதில் இருந்து எவ்வாறு தப்பித்து கொள்வது என்றும், வெள்ளம் ஏற்படும்போது வீட்டு உபயோக பொருட்களான குடம், பிளாஸ்டிக் பாட்டில்கள், சிலிண்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எவ்வாறு தப்பித்து கொள்வது என்றும் செயல்விளக்கம் அளித்தனர். இதில் வனத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story