தொட்டில் கட்டி விளையாடியபோது கழுத்தில் சேலை இறுக்கி மாணவன் பலி
வீட்டில் தொட்டில் கட்டி விளையாடியபோது கழுத்தில் சேலை இறுக்கியதால் 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பாலாஜி (வயது 11). இவன், 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை ரகுபதி, தனது மனைவியுடன் கடைக்கு சென்று விட்டார்.
வீட்டில் பாலாஜி மட்டும் தனியாக இருந்தான். இதற்கிடையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பாலாஜி தொட்டிலுக்கு கட்டிய சேலை கழுத்தை இறுக்கியதால் மயங்கிய நிலையில் தொங்கியபடி கிடந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாலாஜியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெற்றோர், கடைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் தனியாக இருந்த பாலாஜி, சேலையால தொட்டில் கட்டி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டிலுக்கு கட்டிய சேலை அவரது கழுத்தை இறுக்கியதால் பாலாஜி பரிதாபமாக இறந்தது தெரிந்தது.
இதுபற்றி ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story