மாவட்ட செய்திகள்

இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்: அறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு + "||" + Those who have can put food-those who do not can: The innovative arrangement to feed the poor in Aranthangi

இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்: அறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு

இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்: அறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு
அறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இருப்பவர்கள் உணவு வைக்கலாம், இல்லாதவர்கள் உணவை சாப்பிடலாம்.
அறந்தாங்கி,

அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து பசியுடன் வாடுபவர்கள் பசியாற நூதன ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறந்தாங்கி நகராட்சி தாலுகா ஆபீஸ் சாலையில் பொது இடத்தில் கண்ணாடி பெட்டி வைத்துள்ளனர். இந்த பெட்டியில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் உணவு வைக்கப்பட்டு இருக்கும்.


பசியுடன் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த உணவை எடுத்து சாப்பிடலாம். இதற்கு பணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல் வசதிப்படைத்தவர்கள் உள்பட உணவு தானம் செய்ய விரும்புபவர்கள் ஓட்டலில் வாங்கியோ அல்லது வீட்டில் சமையல் செய்து கொண்டு வந்தோ உணவு வைக்கலாம். இதனை இல்லாதவர்கள் எடுத்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

அதேநேரத்தில் கண்ணாடி பெட்டியில் உள்ள உணவை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பழைய சாப்பாடு வைக்காத வகையில் கண்காணிப்பார்கள். இந்த கண்ணாடி பெட்டியை நேற்று சமூக ஆர்வலர்கள் வைத்தனர். சமூக ஆர்வலர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்த கண்ணாடி பெட்டியில் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள், ஏதாவது சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் உணவு வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டத்துடன் தட்டு ஏந்தி பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் புதுவை தலைமை தபால் நிலையம் முன் பட்டதாரி இளைஞர்கள் ஒரு கையில் பட்டம், மற்றொரு கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக் கோரி பா.ஜ.க. நூதன போராட்டம்
பழுதடைந்த உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
3. நிலுவை சம்பளம் வழங்கக்கோரி கண்களில் கருப்பு துணி கட்டி பள்ளி ஆசிரியர்கள் நூதன போராட்டம்
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி கண்களில் கருப்பு துணி கட்டி அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நூதனமாக போராட்டம் நடத்தினர்.
4. வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி சங்கிலியால் கைகளை கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்
வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி சங்கிலியால் கைகளை கட்டி நாகையில், விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் கரியை பூசி நூதன ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து ஓ.பி.சி., டி.என்.டி. சமூகங்கள் நல அமைப்பினர் உடலில் கரியை பூசி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.