கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகம் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தகவல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ஆஸ்டின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
மேலகிருஷ்ணன்புதூர்,
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாதம்தோறும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மிக தொலைவில் உள்ளது.
இதனால், பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. எனவே, தங்கள் பகுதியில் பகுதிநேர ரேஷன்கடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் (ஆஸ்டின் எம்.எல்.ஏ.) கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் எடுத்து கூறினேன்.
அதன்அடிப்படையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் கீழ்கண்ட பகுதிகளில் புதிதாக நடமாடும் ரேஷன்கடைகளை செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.
காட்டுபுதூர்
காட்டுபுதூர் நியாயவிலைக்கடை மூலம் கடுக்கரை அம்பலம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூட கட்டிடம் அருகில் மாதத்தின் 2-வது, 3-வது செவ்வாய்க்கிழமையும், 4-வது வியாழக்கிழமையும் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வழங்கப்படும். தாழக்குடி பார்வதிபுதூர் ரேஷன்கடை மூலம் கனகமூலம் புதுக்குடியிருப்பு படிப்பகம் அருகே புதன்கிழமை தோறும் பொருட்கள் வழங்கப்படும். சிறமடம் ரேஷன்கடை மூலம் காரியாங்கோணம் அங்கன்வாடி கட்டிடம் அருகில் மாதம்தோறும் 2-வது ஞாயிற்றுக்கிழமையும், தோவாளை 1 ரேஷன்கடை மூலம் பண்டாரபுரம் கோவில் அரங்கம் அருகில் 2-வது ஞாயிற்றுக்கிழமையும், தோவாளை 2 வீரமார்த்தாண்டன்புதூர் ரேஷன்கடை மூலம் குருக்கள்மடம் படிப்பகம் அருகில் புதன்கிழமைதோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
தென்தாமரைகுளம்
அழகியபாண்டியபுரம் மேல்கரை ரேஷன்கடை மூலம் பிளவக்கல்விளை ஆர்.சி. கோவில் அருகில் மாதத்தில் 1-வது வியாழக்கிழமை மற்றும் 3,4-வது திங்கட்கிழமையும், மேலகிருஷ்ணன்புதூர் ரேஷன்கடை மூலம் நயினார்புதூர் செங்கிடகாரசுவாமி கோவில் திடலில் 2-வது வியாழக்கிழமையும், நங்கூரான் பிலாவிளை கடைமூலம் இலந்தையடிதட்டு முத்தாரம்மன் கோவில் அருகில் 3-வது புதன்கிழமையும், குமாரபுரம் தோப்பூர் கடை மூலம் கோழிக்கோட்டு பொத்தை மாடத்து இசக்கியம்மன் கோவில் அருகில் 2-வது வியாழக்கிழமையும், மைலாடி கடை மூலமாக ஆலடிவிளை நாராயணசுவாமி மண்டபம் அருகே 2-வது வியாழக்கிழமையும், தேரூர் கடை மூலம் தண்டநாயக்கன்கோணம் சாஸ்தாகோவில் அருகே 2-வது வியாழக்கிழமையும், இரவிபுதூர் கடை மூலம் பத்மநாபன்புதூர் ஊர் படிப்பகம் அருகில் 2-வது வியாழக்கிழமையும், கரும்பாட்டூர் கடை மூலம் கரம்பவிளை ரட்சணிய சேனை ஆலயம் அருகே 2-வது வியாழக்கிழமையும், தென்தாமரைகுளம் கடை மூலம் குமாரபெருவிளை நாராயணசாமி கோவில் அருகில் 1-வது செவ்வாய்க்கிழமை மற்றும் 2-வது வியாழக்கிழமையும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
கீழபுத்தளம்
இதுபோல், கீழபுத்தளம் ரேஷன் கடை மூலம் மணவாளபுரம் சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் 1-வது செவ்வாய், 2-வது வியாழக்கிழமையும், அழகப்பபுரம் கடை மூலம் தெற்குபகவதிபுரம் ஊர் படிப்பகம் அருகில் 1-வது செவ்வாய்கிழமை, 2-வது வியாழக்கிழமையும், பறக்கை கடை மூலம் காடேற்றி ரட்சணியசேனை கோவில் அருகில் 1-வது செவ்வாய்கிழமை முற்பகலும், கோவளம் கடை மூலம் சிலுவை நகர் ஆலயம் அருகே 1-வது செவ்வாய்க்கிழமை மற்றும் 2,3-வது வியாழக்கிழமையும்,
கன்னியாகுமரி கடை மூலம் குண்டல் சி.எஸ்.ஐ. ஆலயம் அருகே 1, 2-வது செவ்வாய்க்கிழமை, 3-வது வியாழக்கிழமையும், கொட்டாரம் கடை மூலம் பெருமாள்புரம் சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் 1-வது செவ்வாக்கிழமை, 2-வது வியாழக்கிழமையும், என்.ஜி.ஓ. காலனி கடைமூலமாக குஞ்சன்விளை முத்தாரம்மன் கோவில் அருகில் 1, 3-வது செவ்வாய்க்கிழமை, 3-வது வியாழக்கிழமையும், துவரங்காடு கடை மூலம் மத்தியாஸ்நகர் சந்திப்பில் 1, 2-வது செவ்வாய்க்கிழமை, 3-வது வியாழக்கிழமையும் பொருட்கள் வழங்கப்படும். இந்த நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு ஆஸ்டின் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Related Tags :
Next Story