பண்ணையாளர்களிடம் முட்டைகளை வாங்குவதில் முரண்பாடு நீடித்தால் தினசரி விலை நிர்ணயம் - மண்டல தலைவர் எச்சரிக்கை


பண்ணையாளர்களிடம் முட்டைகளை வாங்குவதில் முரண்பாடு நீடித்தால் தினசரி விலை நிர்ணயம் - மண்டல தலைவர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2020 10:15 PM GMT (Updated: 22 Sep 2020 7:28 PM GMT)

பண்ணையாளர்களிடம் முட்டைகளை வாங்குவதில் முரண்பாடு நீடித்தால் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படும் என்று மண்டல தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மண்டலத்தில் தினசரி ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவற்றிற்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விலை நிர்ணயம் செய்கிறது. 

இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து வியாபாரிகள் 25 காசுகள் முதல் 30 காசுகள் குறைத்து வாங்கி வருகின்றனர். எவ்வளவு காசுகள் குறைத்து வாங்க வேண்டும் என்பதை நாமக்கல் டிரேடர்ஸ் அசோசியேசன் நிர்ணயம் செய்கிறது. இதில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் டிரேடர்ஸ் அசோசியேசன் அனுப்பி உள்ள குறுஞ்செய்தியில் 30 பைசா குறைத்து வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடைமுறையில் வியாபாரிகள் 35 காசுகள் குறைத்து பண்ணையாளர்களிடம் வாங்குகிறார்கள். இந்த முரண்பாடு தொடர்ந்தால் தற்போது தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறிவித்து வரும் வாரம் 3 முறை விலை நிர்ணயம் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, தினசரி விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story