உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு


உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 23 Sep 2020 2:52 AM GMT (Updated: 2020-09-23T08:22:33+05:30)

உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் அந்த பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறார். இந்த நிலத்தில் கத்திரிக்காய், வேர்க்கடலை உள்ளிட்டவைகளை பயிரிட்டிருந்தார். எலி தொல்லை அதிகமாக இருந்ததால் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எண்டத்தூர் கிராமம், பள்ளத்தெருவை சேர்ந்த விவசாயி கோபி (வயது 46) என்பவர் அங்கு கத்திரிக்காய் பறிப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது.

சாவு

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாரத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story