அரியலூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 20 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,537 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 2,750 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி 38 பேர் இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 367 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 51 ஆயிரத்து 324 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் நகராட்சி பகுதியில் இதுவரை மொத்தம் 601 பேரும், அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 630 பேரும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 490 பேரும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 514 பேரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 346 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 267 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 240 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 429 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story