திருவாரூரில் வேளாண் சட்ட மசோதா நகல் எரிப்பு


திருவாரூரில் வேளாண் சட்ட மசோதா நகல் எரிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 1:15 PM GMT (Updated: 23 Sep 2020 1:31 PM GMT)

திருவாரூரில் வேளாண் சட்ட மசோதா நகல் எரிக்கப்பட்டது.

திருவாரூர்,

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகளும், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வருகிற 25-ந் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் சங்கமும், 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தி.மு.க.வும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் மசோதாக்களின் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட தலைவர் கலைமணி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் சேகர், தியாகு, ரஜினிகாந்த், பவுன்ராஜ், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது வேளாண் மசோதா நகலை தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

Next Story