புதிய தடுப்பணைகள் ஏற்படுத்தி ரூ.338¾ கோடியில் நீர் மின்நிலையம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு
புதிதாக தடுப்பணை அமைத்து ரூ.338¾ கோடியில் நீர் மின்நிலையம் அமையும் இடத்தை கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.
உப்பிலியபுரம்,
துறையூர் வட்டம் மதுராபுரி, சித்திரைப்பட்டி, சிங்களாந்தபுரம், காமாட்சி நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப்பணி முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் பொது இடங்களில் நடமாடக் கூடாது. முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீடுகளில் உள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
நீர் மின்நிலையம்
துறையூர் வட்டம் புளியஞ்சோலையில் நீர் மின்திட்டத்தின் கீழ் கொல்லிமலையிலிருந்து வரும் நீரை அசக்காடுப்பட்டி அய்யாறு குறுக்கே தடுப்பணை, கோவிலூர் அரப்பளீஸ்வரர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, தெலியங்கூடு தடுப்பணை, ஈராங் குழிப்பட்டி தடுப்பணை, காடம்பள்ளம் தடுப்பணை ஆகிய இடங்களில் புதிதாக தடுப்பணை அமைத்து வரும் நீரை பயன்படுத்தி புளியஞ்சோலையில் நீர் மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக தமிழக அரசு ரூ.338 கோடியே 79 லட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளது. நீர் மின்நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அமைக்கப்படவுள்ள இடத்தை கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் வாரிய செயற்பொறியாளர் பத்மநாதன், உதவிப் பொறியாளர் விஷ்ணு, துறையூர் வட்டாட்சியர் அகிலா மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story