மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுவை அழிக்க ரூ.1½ கோடி மானியம்


மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுவை அழிக்க ரூ.1½ கோடி மானியம்
x
தினத்தந்தி 24 Sep 2020 3:43 AM GMT (Updated: 24 Sep 2020 3:43 AM GMT)

மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுவை அழிக்க, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி மானியம் வழங்கப்பட உள்ளது என்று வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரி யாக 25 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி தற்போது திண்டுக்கல், சாணார்பட்டி, ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம் பட்டி, வடமதுரை, வேடசந் தூர் ஆகிய ஒன்றியங்களில் மக்காச்சோள சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. இந்த மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை ஒருங் கிணைந்த முறையில் தடுக் கலாம்.

அதன்படி ஒருகிலோ விதைக்கு 10 கிராம் பிவேரியா பெஸ்சியானா எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும் விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் ஒரு எக்டேருக்கு 2.5 லிட்டர் என்ற அளவில் அசாடிராடின் தெளிக்க வேண்டும். அதன் பின்னர் 40 முதல் 45 நாட்களில் எக்டேருக்கு 4 கிலோ மெட்டாரைசியம் அனி சோபிலியே அல்லது 11.7 சதவீதம் ஸ்பைனிடாரம், 250 மி.லி. எஸ்.சி. தெளிக்க வேண்டும்.

ரூ.1½ கோடி மானியம்

இதுதவிர தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள் அல்லது சோளம் ஆகிய பயிர்களை வரப்பு பயிராக பயிரிட வேண் டும். உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக விதைக்கலாம். பயறு வகை பயிர்களில் பொறிவண்டுகள் அதிகம் இருப்பதால், இளம் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். எனவே, மேற்கண்ட தொழிற் நுட்பங்களை மேற்கொண்டு ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுக்களை தடுக் கலாம்.

மேலும் மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுக்களை தடுப்பதற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் எக் டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 9 ஒன்றி யங்களில் மொத்தம் 7 ஆயிரத்து 500 எக்டேருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது. எனவே, மக்காச் சோள விவசாயிகள் சம்பந்தப் பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Next Story