மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 20,443 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.
4,144 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 13,560 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 19 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 184 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கே.கே.எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்த 19 வயது நபர், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த 19 வயது நபர், மீசலூரை சேர்ந்த 25 வயது நபர், பாலன்நகரை சேர்ந்த 68 வயது முதியவர், 58 வயது பெண், சூலக்கரையை சேர்ந்த 34 வயது நபர், கருப்பசாமிநகரை சேர்ந்த 62 வயது மூதாட்டி, ஏ.எஸ்.எஸ்.எஸ்.தெருவை சேர்ந்த 58 வயது நபர், வடக்கு தெருவை சேர்ந்த 25 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 35 வயது நபர், அனுப்பன்குளத்தை சேர்ந்த 51 வயது நபர், சித்துராஜபுரத்தை சேர்ந்த 44 வயது நபர், 70 வயது முதியவர், திருத்தங்கல் விநாயகர் காலனியை சேர்ந்த 62 வயது மூதாட்டி, சிவகாசி பிள்ளையார்கோவில்தெருவை சேர்ந்த 18 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, நேருஜி நகரை சேர்ந்த 11 வயது சிறுவன், திருத்தங்கலை சேர்ந்த 32 வயது பெண், சிவகாசியை சேர்ந்த 30 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சாத்தூர், வெம்பக்கோட்டை, மகாராஜபுரம், வத்திராயிருப்பு, சொக்கநாதன்புதூர், கீழதுலுக்கன்குளம், மல்லாங்கிணறு, காரியாபட்டி, திருச்சுழி, செம்பட்டி, எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த 3 பேர், உப்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15,074 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,023 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 4,144 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. நேற்றைய மருத்துவ பரிசோதனை பட்டியல்படி சிவகாசி பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சிவகாசி பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளாட்சி அமைப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story