வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகள் - கலெக்டர் சிவன்அருள் ஆய்வு
வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள உழவர் சந்தை, வாரச்சந்தையை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தை, வாரச்சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது.
தற்போது வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் உள்ள வாரச்சந்தை மைதானத்தை மீண்டும் திறப்பது குறித்தும், அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வாரச்சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி கடைகளை ஆய்வு செய்தார். அப்போது அதே பகுதியில் கூடுதலாக 25 கடைகளை கட்டவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அலி, கிராம நிர்வாக அலுவலர் சற்குணகுமார் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story