திருப்பத்தூரில் அதிகாரி உள்பட 3 பேருக்கு தொற்று எதிரொலி: வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது
திருப்பத்தூரில் அதிகாரி உள்பட 3 பேருக்கு தொற்று எதிரொலியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மற்றும் அலுவலக ஜீப் டிரைவர் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
இதனிடையே நேற்று மாவட்டம் முழுவதும் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரில் 3 பேர், மூக்கனூரில் 2 பேர் மற்றும் எம்.எம்.எம்.ரெட்டி தெரு, வாலாட்டியூர், ஊசிநாட்டன் வட்டம், பாய்ச்சல், காவேரிப்பட்டு, தாமலேரிமுத்தூர், பெரியமோட்டூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேரும் அடங்குவர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 57 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Related Tags :
Next Story