கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு கொரோனா
கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் (வயது 55). அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இவர் எல்லாபுரம் ஒன்றியம் மஞ்சங்காரணை ஊராட்சியில் வசித்து வருகிறார். கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் இவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான உடல் சோர்வு மற்றும் லேசான காய்ச்சலுடன் கூடிய தலைவலி இருந்து வந்தது.
இதையடுத்து அவர் கடந்த 22-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அனிதா என்ற மனைவியும், சம்யுக்தா, சஞ்சனா என்ற மகள்களும் உள்ளனர்.
எம்.எல்.ஏ. கே.எஸ். விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மனைவி மற்றும் 2 மகள்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story