கங்கனா பங்களா இடிக்கப்பட்ட விவகாரம் சஞ்சய் ராவத் எம்.பி. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
நடிகை கங்கனா வீடு இடிக்கப்பட்ட விவகாரத்தில் பதில் அளிக்க சஞ்சய் ராவத் எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதை அடுத்து நடிகை கங்கனா ரணாவத்திற்கும், மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த 9-ந் தேதி நடிகையின் பாந்திரா பங்களா வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததாக கூறி அதை மாநகராட்சி இடித்தது.
இதை எதிர்த்து கங்கனா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வீடு இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என உத்தரவிடவும், ரூ.2 கோடி இழப்பீடு தர மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, நடிகை கங்கனாவை சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. மிரட்டுவது போன்ற பேச்சு அடங்கிய வீடியோவை அவரது தரப்பு ஐகோர்ட்டில் சமர்பித்தது.
இதையடுத்து ஐகோர்ட்டு மனு மீதான விசாரணையில் சஞ்சய் ராவத், எச். வார்டு மாநகராட்சி அதிகாரியை பிரதிவாதியாக சேர்த்தது. மேலும் வீடியோ குறித்து பதில் அளிக்க சஞ்சய் ராவத்திற்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Tags :
Next Story