திருச்சி புறநகர் பகுதி மக்கள் தேவைக்காக புதிதாக 3 ஆம்புலன்ஸ் சேவை வசதி


திருச்சி புறநகர் பகுதி மக்கள் தேவைக்காக புதிதாக 3 ஆம்புலன்ஸ் சேவை வசதி
x
தினத்தந்தி 25 Sept 2020 7:40 AM IST (Updated: 25 Sept 2020 7:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி புறநகர் பகுதி மக்கள் தேவைக்காக புதிதாக 3 ஆம்புலன்ஸ் சேவை வசதி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே, 31 இடங்களில் 108 இலவச அவசர ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்ட மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இவை காட்டுப்புத்தூர், துவாக்குடி மற்றும் லால்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. அவற்றில் ஒரு வாகனத்தில் அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான வென்டிலேட்டர், டிப்பிலேட்டர், இன்பியூசன்பம்ப் ஆகிய அனைத்து வசதிகளும் கொண்டது. இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) டாக்டர் அக்சையா பேகம், இணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் லெட்சுமி, அரசு மருத்துவமனை மருந்து கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story