வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 2:26 AM GMT (Updated: 25 Sep 2020 2:26 AM GMT)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை எதிர்்த்து திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில்் வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹிப்சிபா நிர்மலா உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளிநடப்பு

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில் விவசாயிகள் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வேளாண் மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் திருவாரூர், மன்னார்குடி வருவாய் கோட்டம் வாரியாக விவசாயிகள் குறைதீர்்க்கும் கூட்டம் தனித்தனியே நடந்தது. இதில் விடுபட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story