வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு ரவுடியிசம் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
நாகை அருகே வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு ரவுடியிசம் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்,
நாகை மாவட்டம் வலிவலம் அருகே கொடியாலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கார்த்தி(வயது 22). சம்பவத்தன்று இவர் வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு நடந்து வந்தபோது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் பின்னணி இசையில் நம்மை காப்பாற்றி கொள்ள ரவுடியிசம் செய்யவேண்டும் என்ற வசனத்தை கார்த்தி மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
கைது
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதனை அறிந்த வலிவலம் போலீசார், மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட கார்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story