கொரோனாவால் இறந்தவர் உடல் 2 மாதங்களுக்கு பின் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
நகைக்கடை உரிமையாளரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக மனைவி புகார் தெரிவித்ததையடுத்து கொரோனாவால் இறந்தவர் உடல் 2 மாதங்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நேரு நகரைச் சேர்ந்தவர் சலீம்(வயது 41). நகைக்கடை உரிமையாளர். இவரது மனைவி சர்மிளா(37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சலீமுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 6 நாட்கள் கழித்து 29-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சலீம் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அன்று மாலை 4 மணி அளவில் சலீம் உடலை அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர் சலீம் உடலை மாலை 6 மணி அளவில் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவில் உள்ள அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்தனர்.
உடல் உறுப்புகள் திருட்டு
இந்த நிலையில் சர்மிளா, தனது கணவரின் இறப்பிற்கான தன்மை மற்றும் காரணம் அறியும் பொருட்டும், தனது கணவரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதா? என்பது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. மேலும் அரசு வெளியிட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில், எனது கணவர் பெயர் இடம் பெறவில்லை.
எனவே தனது கணவரின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக்குழு மூலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தஞ்சை சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.
தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
இதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று காலை 8 மணியளவில் பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா முன்னிலையில் சலீம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தஞ்சை மருத்துவக்கல்லூரி டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை மதியம் 2 மணி வரை நீடித்தது. சலீமின் மனைவி சர்மிளா, தனது கணவரின் உடலை அடையாளம் காட்டினார். பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். இந்த சம்பவத்தால் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story